Tamilnadu
“வாடகைக்கு வந்த கார் ஓட்டுநரை கொலை செய்த கோவை தம்பதி” : விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் - நடந்தது என்ன?
கோவை மாவட்டம் வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சனு. இவர் தனியார் டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் சனு உயிரிழந்ததாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை ஆய்வு செய்தனர். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து, மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்பட்டது. விசாரணையில் 8ம் தேதி தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸில் பயணித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில், பணத்திற்காக அவரும் அவரது மனைவி அமலோற்பவமும் சேர்ந்து ஓட்டுரை கட்டையால் தாக்கி விஷ் ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!