Tamilnadu
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: உச்ச நீதிமன்ற ஆணைப்படி உரிய நீரை வழங்குக - தமிழ்நாடு அரசு கோரிக்கை!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் இன்று (11.02.2022) காணொலிக் காட்சி மூலம் ஆணையத்தின் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்ரமணியன், கேரளா மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிகே. ஜோஸ், கர்நாடக மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங், பாண்டிச்சேரி மாநில ஆணையாளர் மற்றும் செயலாளர் எ. விக்ராந்த் ராஜா, தமிழ்நாடு காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் பாசன ஆண்டில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி மாதம் வாரியாக நீரை பிலிகுண்டுலுவில் கர்நாடக அரசு வழங்கிட வலியுறுத்தப்பட்டது.
மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பொருள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் இக்கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகவே இப்பொருள் குறித்து விவாதம் தவிர்க்கப்பட்டது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!