Tamilnadu
“பள்ளி சிறார்களுக்கு மதவெறி முழக்கத்தை சொல்லிக்கொடுக்கும் RSS கும்பல்” : நாராயணசாமி கடும் கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரத்தை புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் மூலமாக நுழைப்பதற்கான வேலையை பா.ஜ.க மறைமுகமாக செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்ச்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது : இரு தினங்களுக்கு முன்பு அரியாங்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என பேசியுள்ளார். எல்லா மதத்தினருக்கும் அவர்களது மதத்தினுடைய கோட்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்க உரிமை உண்டு. இதைப்பற்றி கேள்வி கேட்க எந்த அரசு அதிகாரிக்கும் உரிமை கிடையாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலையை இங்கு உருவாக்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வாதானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரத்தை பள்ளிகள் மூலமாக புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பா.ஜ.க மறைமுகமாக செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார். மேலும் கல்வித்துறையை முதல்வர் ரங்கசாமி தன் கையில் எடுத்துக்கொண்டு இவ்விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!