Tamilnadu
அம்பத்தூரில் கடத்தப்பட்ட ’பேபி லாக்டவுன்’ கோயம்பேட்டில் மீட்பு : சென்னை போலிஸார் துரித நடவடிக்கை!
சென்னை அடுத்த அம்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகே புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் சேர்ந்தவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (44) அவரது மனைவி புத்தினி (39) மற்றும் குழந்தைகள் ஆகாஷ், துருக்கி மற்றும் காணாமல் போன குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளனர். கொரோனா நேரத்தில் மூன்றாவதாக குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு லாக்டவுன் என்று செல்லமாக பெயர் சூட்டி உள்ளார்கள்.
இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை பார்த்தபோது அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை லாக்டவுன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். அதன் பிறகு போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்கள். மேலும் அருகில் இருக்கக்கூடிய ஏரி பகுதிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குழந்தையை தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில் சேலம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் ஒரு குழந்தை வெகுநேரமாக அழுது கொண்டிருப்பதாக பயணி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோயம்பேடு போலீசார் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மூன்று நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட கிஷோரின் குழந்தை என்பது தெரியவந்தது. உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் அம்பத்தூர் போலீசார் முன்னிலையில் குழந்தையை பெற்றோருடன் கோயம்பேடு போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
குழந்தையை யார் அங்கு எடுத்துச் சென்றது என்பது தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!