Tamilnadu
கால்வாயில் ரத்தக்கறையுடன் வந்த சூட்கேஸ்; திறந்த பார்த்த போலிஸாருக்கு அதிர்ச்சி; திருப்பூர் அருகே பரபரப்பு
திருப்பூரை அடுத்த புதுநகர் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாலையோர கால்வாயில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலிஸாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இருந்தது தெரியவந்தது.
பின்னர் உடலை கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த பெண் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சூட்கேஸில் பெண்ணின் சடலம் இருந்த நிகழ்வால் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !