Tamilnadu
சமூக நீதி காத்திட அனைத்திந்திய கூட்டமைப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிகளுக்கு யெச்சூரி பாராட்டு!
சமூக நீதி காத்திட அனைத்திந்திய கூட்டமைப்பு அமைத்திட மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
அன்பார்ந்த மு.க.ஸ்டாலின், 2022 பிப்ரவரி 2 ஆம் நாளிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. தேசிய அளவில் கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் கொள்கைகளை எய்துவதற்காக செயல்படும் அனைத்துத் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் அது போன்று இயங்கிடும் தனிநபர்கள், அமைப்புகள் அனைத்தையும் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்னும் ஒரே மேடையில் கொண்டு வருவதற்காகத் தாங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனினும், இப்பிரச்சினைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கலந்தாலோசனைகள் தேவைப்படுகின்றன. சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், நம் அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளது போல் அனைவருக்கும், அவர்களின் “சாதி, மதம் அல்லது பாலின வித்தியாசங்கள் எதுவுமின்றி” சம வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்திடவும், சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தாங்கள் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களை எய்தக்கூடிய விதத்தில் கலந்தாலோசனைகளை மேற்கொள்வீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
-
யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!
-
“இந்தியாவே உங்களுடைய சொத்து” : தோழர் ஜீவா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்சிய வரலாறு!
-
“தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி செல்கிறது” : திராவிட மாடல் அரசை பாராட்டிய ஒன்றிய அரசு - முரசொலி!