Tamilnadu
விஷம் கலந்து மயில்கள் கொலை.. குற்றவாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸ் ஷாக்!
திருப்பத்தூர் மாவட்டம், கூவல் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். இதனால் மக்காச்சோளத்தைச் சாப்பிடுவதற்காக அடிக்கடி மயில்கள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மயில்களைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து அரிசியில் விஷம் கலந்து வயல்பகுதி முழுவதும் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மயில்கள் அரிசியைச் சாப்பிட்ட உடனே மயங்கி விழுந்துள்ளது.
பின்னர் மயில்கள் இறந்துள்ளது இது குறித்து போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு வந்த போலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மயில்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் உடற்கூறு ஆய்வில் மயிலுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதையடுத்து ரமேஷிடம் விசாரணை நடத்தியபோது, பயிர்களை சேதப்படுத்தியதால் அரிசியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!