Tamilnadu

பெண்களுக்கு தொடரும் பாலியல் அத்துமீறல்.. ‘NO MEANS NO’ வசனத்தை பேசி கேள்வி எழுப்பிய எம்.எம்.அப்துல்லா!

நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. அப்போது மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி., எம்.எம்.அப்துல்லா கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய எம்.எம். அப்துல்லா, “தங்களுக்கு எதிராக நடக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷ்யங்களில் பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இருக்கின்றனது.

ஆனால், ‘NO MEANS NO’ திருமணத்திற்குப் பின்பு பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களும் குற்றமே; இது தொடர்பாக பெருமாபாலன பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

எனவே இதற்காக இளம் வயதிலேயே பெண்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது இதற்காக பள்ளி மற்றும் கல்லூரி அளவில் விழிப்புணர்வு திட்டங்கள் ஏதேனும் ஒன்றிய அரசு செய்து வருகிறதா? என கேள்வி எழுப்பினர்.

Also Read: “சாமி சிலைகளை கடத்தி ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி.. பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் கைது” : நடந்தது என்ன ?