Tamilnadu
PUBG விளையாடிய இளைஞருக்கு அரிவாள் வெட்டு - ஆத்திரத்தில் முதியவர் செய்த விபரீதம் : நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பாறைக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் தனது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, இளைஞர்கள் அனைவரும் அதிகமாகச் சத்தம்போட்டு விளையாடியுள்ளனர். இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமசாமி என்ற முதியவர் இவர்களிடம் 'தூங்க முடியவில்லை. சத்தம் போடாமல் விளையாடுங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் முதியவருக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது பெற்றோர் போலிஸாரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் ராமசாமியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!