Tamilnadu
“6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது” : போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி - மாலா பெயர் மாற்றப்பட்டுள்ளது. தம்பதில் . இதில் ரவி பெயின்ட்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலா தனியார் ரெடிமேட் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிசெய்து வருகிறார்.
இவர்களுக்கு 10 வயதில் மகனும் மற்றும் 6 வயதில் மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது தாயாரிடம் விட்டுவிட்டு கணவன் மனைவி வேலைக்கு சென்றுள்ளனர், மாலை திரும்பி வரும்போது தனது தாயிடம் 6 வயது பெண் குழந்தை, தான் விளையாடி கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டு நபர் பனங்கிழங்கு பிடிங்கி தருவதாக அழைத்துக்கொண்டுபோய் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தான் சாத்தம்மிடவே தன்னை மீண்டும் வீட்டருகே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ந்துபோன மாலா உடனடியாக தனது கணவருடன் சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலிஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தப்பியோடிய பாபு (50) என்பவரை தேடிவந்த நிலையில், இன்று கைது செய்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
விசாரணை மேற்க்கொண்ட மகளிர் காவல்துறையினர் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் பின்னர் குற்றவாளி பாபு மீது போச்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!