Tamilnadu
லிஃப்டில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்; நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்க்கு காப்பு - சென்னையில் பரபரப்பு!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காய்கறி டெலிவரி செய்ய சூளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஷ் என்ற இளைஞர் சென்றிருக்கிறார்.
ஆறாவது மாடியில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு லிஃப்டில் வந்த விக்னேஷுடன் அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரும் வந்திருக்கிறார்.
தனியாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தில் லிஃப்டில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக இருந்து விக்னேஷ் அநாகரிக செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் சார்பில் வீட்டு உரிமையாளர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!