Tamilnadu
Facebook பதிவில் கமெண்ட் பதிவிட்ட நபர் கார் ஏற்றி கொலை : தூத்துக்குடியில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவர் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 16ம்தேதி செந்தாமரைக் கண்ணன் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இவரின் வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த செந்தாமரைக்கண்ணணுக்கு, சாம்ராட் பாயண்டியன் குடும்பதிற்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இரண்டு குடும்பத்திற்கு முன்விரோதம் 15 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சாம்ராட் பாண்டியன் கடந்த ஜனவரி 4ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து அவரது நண்பர்கள் முகநூலில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் செந்தாமரைக்கண்ணன், இறைவனுடைய தண்டனை என கமெண்ட் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாம்ராட் பாண்டியன் நண்பர்கள் மகேஷ், சுடலைமணி ஆகியோர் அவரை கார் ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !