Tamilnadu
சிறுவன் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்.. குடும்ப பகையால் நடந்த பகீர் கொலை: விசாரணையில் அதிர்ச்சி!
கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாண்டி. இவரது 4 வயது மகன் புதனன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென சிறுவன் காணவில்லை.இதனால் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இதையடுத்து பெற்றோர் சிறுவன் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனர்.இந்நிலையில் சிறுவன் சீனிவாசன் என்பவரது முந்திரிக்காட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தான்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் சிறுவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து சிறுவன் மர்ம மரணம் குறித்து போலிஸார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது ரஞ்சிதா என்ற பெண் சிறுவனை அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். பிறகு போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
ரஞ்சித்தா, முத்தாண்டியின் உறவுக்கார பெண். இவர்கள் இருவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட தகராறால் பேசாமல் இருந்துவந்துள்ளனர். சம்பவத்தன்று கொய்யா பழத்துடன் ரஞ்சிதா முந்திரிகாட்டிற்கு சென்றுள்ளார்.
இதைப்பார்த்த சிறுவன் அவரின் பின்னால் சென்றுள்ளார். அப்போது குடும்ப பகைக் காரணமாக தனியாக வந்த சிறுவனை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுவனைக் கொலை செய்த ரஞ்சிதாவை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப பகை காரணமாகச் சிறுவன் கொலை செய்யப்பட்ட அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!