Tamilnadu
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசை பாராட்டிய ஐகோர்ட் - ஏன் தெரியுமா?
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி மறுப்பு தெரிவித்தது.
கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தலை நடத்த தடையில்லை. தள்ளி வைக்க உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணமாக அமைந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்சிகள் கடைபிடிக்க வேண்டும்.
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளருடன் மூன்று பேருக்கு மேல் வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம்.
தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்கக் கூடாது. வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்து இருப்போம்; விதிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை கண்காணிப்போம்.
கொரோனா பரவலை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்கக் கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டிற்குரியது. கொரோனா தடுப்பிற்க்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்க அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றபடுகிறதா அல்லது மீறப்படுகிறதா என்பது குறித்து நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரலாம்.தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!