Tamilnadu
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.. 9வது முறையாக பரோலை நீட்டித்த தமிழ்நாடு அரசு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆளுநரைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகச் சிறையிலிருந்த பேரறிவாளனுக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அளித்தார்.
இந்த மனுவை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 28ம் தேதி ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து பரோலில் வந்த பேரறிவாளன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து பரோல் முடியும் போது ஒவ்வொரு முறையும் பேரறிவாளனுக்கு பரோல் மீண்டும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றோடு பரோல் முடியும் நிலையில் 9 வது முறையாகப் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!
-
இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 61 அதிநவீன புதிய பேருந்துகள்... சிறப்பம்சங்கள் என்ன? - விவரம்!
-
“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!
-
“தமிழ்நாட்டை உயர்த்திய திராவிட மாடல்” : உலகம் உங்கள் கையில்” விழவில் துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” : மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!