Tamilnadu
காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்... நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி எஸ்தர் சந்தியா. இந்த தம்பதி காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். மேலும் விவாகரத்து கேட்டு எஸ்தர் சந்தியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதனால் கணவர் மோகன்ராஜ் சில நாட்களாக வேதனையிலிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோகன்ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!