Tamilnadu
“பக்கத்து வீட்டு அக்கா திட்டிட்டாங்க” - கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவி: நடந்தது என்ன?
சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா - வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டதால் சிறுவன் நவீன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகச் சாத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து நவீன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அவரது அக்கா வைஷ்ணவி தூக்கில் தொங்கிய இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வைஷ்ணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் அடிக்கடி வாலிபர் ஒருவருடன் பேசி வந்துள்ளார்.
இதைப்பார்த்த வைஷ்ணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண் வைஷ்ணவியைக் கண்டித்துள்ளார். இதில் மனவேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதில் பக்கத்து வீட்டு அக்கா திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!