Tamilnadu
"வரலைன்னா கொளுத்திருவேன்” : பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகி கைது!
பெரம்பலூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அ.தி.மு.க நகரச் செயலாளராக இருப்பவர் வினோத் (48). இவர் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர் மீது பூலாம்பாடியை சேர்ந்த சுதாலட்சுமி (40) என்பவர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பூலாம்பாடி அ.தி.மு.க நகரச் செயலாளர் வினோத் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்கச் சொன்னதாகவும் சம்மந்தப்பட்டபெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் நீ நடத்தும் கேஸ் கம்பெனியோடு உன்னையும் கொளுத்திவிடுவேன் என அ.தி.மு.க. நகரசெயலாளர் வினோத் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் தொந்தரவுக்கு உள்ளான பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் அரும்பாவூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து பூலாம்பாடி அ.தி.மு.க நகரச் செயலாளர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் புகாரில் பூலாம்பாடி அ.தி.மு.கச் நகர செயலாளர் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புகார் தெரிவித்துள்ள சுதாலட்சுமியின் கணவர் சுய நினைவில்லாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!