Tamilnadu
நடுவானில் அதிர்ச்சி.. மாரடைப்பால் பயணி உயிரிழப்பு: நடந்தது என்ன?
துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்புப் பயணிகள் விமானம் 117 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இதில் நாகைப்பட்டிணத்தை சோ்ந்த மதா்ஸா பஷீா் என்பவர் பயணம் செய்தார்.
இதையடுத்து சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்திலிருந்த மதர்ஸா பஷீருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் து விமானப்பணிப் பெண்கள் அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும் இது குறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மருத்துவக்குழுவைச் சென்னை விமானநிலையத்தில் தயார்நிலையில் இருக்கும்படி கூறியுள்ளனர்.
பின்னர், சென்னை சர்வதேச விமானத்தில், விமானம் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் ஏறி,மதர்ஸா பஷீரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
இதைக்கேட்டு சக பயணிகளும், விமான ஊழியர்களும் சோகமடைந்தனா். பின்னர் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து மதர்ஸா பஷீரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்டும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். நடுவானில் சக பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது பயணிகளுக்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!