Tamilnadu

“திருநங்கைகளின் ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய காவலர்கள்” : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த கொடூரம்!

திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியைச் சேர்ந்த 4 திருநங்கைகள் அப்பகுதியில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துக்கொண்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறி அவர்கள் 4 பேரையும் கைது செய்து மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய காவலர்கள், உங்களின் பாலினத்தை அறிய வேண்டும் எனக் கூறி, ஆடைகளை களையும் படி கூறியுள்ளனர். அதற்கு திருநங்கள் மறுப்புத் தெரிவிக்க அவர்களை மிரட்டு கட்டாயப்படுத்தி ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, அவர்களின் செயற்கை முடியையும் களைந்து சோதனை செய்ததோடு விடாமல், இனி கிராஸ் டிரஸ் அணிந்துகொண்டு நகரில் சுற்ற மாட்டோம் என கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக திருநங்கைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் எந்த ஆதாரமும் இல்லாமல் மிரட்டி பணம் பறித்ததாக தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து LGPTQ சமூக ஆர்வலரின் உதவியோடு அந்த காவலர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் காவலர்கள் நடந்துக்கொண்டவிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. போக்சோவில் கைது செய்த போலிஸ்!