Tamilnadu
புதிய போலிஸ் ரோந்து வாகனங்களை தொடங்கிவைத்த முதலமைச்சர்... இந்த வாகனங்களின் சிறப்பு என்ன?
காவல்துறையின் ரோந்துப் பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவல்துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அனைத்து காவல் ஆணையரகங்களின் கீழ் செயல்படும் காவல் நிலையங்களுக்கு (சென்னை மாநகர காவல் நீங்கலாக) தலா ஒரு நான்கு சக்கர ரோந்து வாகனம், என மொத்தம் 106 ரோந்து வாகனங்கள் 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2022) தலைமைச் செயலகத்தில், காவல்துறையின் ரோந்துப் பணிக்கு கூடுதல் உபகரணங்களுடன் 9 கோடியே 76 இலட்சத்து 67 ஆயிரத்து 340 ரூபாய் மதிப்பீட்டிலான 106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த காவல் ரோந்து வாகனத்தில் பொது அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கி மற்றும் ரோந்து வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் மூன்று வண்ண விளக்குகள் (Light-Bar) பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்வாகனங்களில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து இந்த வாகனத்தின் நகர்வினை அறியவும், அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு செல்லவும் அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து கட்டளையினை அளிக்கவும் முடியும். இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாட்டறைக்கு வரும் அவசர உதவி அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கால அவகாசத்தில் சம்பவ நிகழ்விடங்களுக்கு செல்ல முடியும்.
இந்நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., தாம்பரம் காவல் ஆணையர் முனைவர் மு.ரவி, இ.கா.ப., ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!