Tamilnadu
ரயிலுக்கு அடியில் சிக்கிய 9 மாத குழந்தை, தாய்.. காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு : நடந்தது என்ன?
வேலூர் மாவட்டம், பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. இவர் தனது 9 மாத குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் யுவராணியும் குழந்தையைத் தூக்குவதற்காக நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் இறங்கினார். அந்தநேரம் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இருவர் இருப்பதைப் பார்த்து ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்.
ஆனால் ரயில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்று நின்றது. இதனால் அவர்கள் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனே இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சாதூரியமாக குழந்தையை அனைத்துக் கொண்டு தண்டவாளத்தில் யுவராணி படுத்துக் கொண்டதால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
Also Read
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!