Tamilnadu
கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை; வருத்தத்தில் கணவர் தற்கொலை - ராமநாதபுரத்தில் பயங்கரம்!
ராமநாதபுரம் மாவட்டம், அடஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லாடமுருகன் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மனைவியில் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவியை கொலை செய்த வருத்தத்தில் லாடமருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கணவன், மனைவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?