Tamilnadu

பஞ்சாப்-மோடி விவகாரம்: விஷயம் தெரியாமல் மறியலில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் கைது ! - போலிஸ் நடவடிக்கை!

சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் பஞ்சாப் மாநிலம் சென்றிருந்த பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகக் கூறி மீண்டும் டெல்லி திரும்பினார் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், “பாதுகாப்பு குறைப்பாடு எதுவும் ஏற்படவில்லை. பிரதமர் மோடி விமானம் மூலம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை மார்க்கமாக வந்தார்.

பிரதமரின் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் 700 பேர்தான் நிகழ்ச்சிக்கு வந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்லி மற்ற காரணங்களை கூறி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்” என பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்க பஞ்சாப் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாகக் கூறி சேலம் மாவட்ட ரயில் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 40 பேரை கைது செய்தனர்.

முன்னதாக பஞ்சாப்பில் பிரதமர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட பகுதி காலியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பிரதமர் மோடி திரும்பிச் சென்றதற்கான உண்மையான காரணம் இதுதான்” : போட்டு உடைத்த பஞ்சாப் முதலமைச்சர்!