Tamilnadu
தோழியின் குளியலறை புகைப்படத்தை ஆண் நண்பருக்கு அனுப்பிய உயிர் தோழி.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதேபகுதியைச் சேர்ந்த தனது 23 வயதாகும் பெண் தோழியுடன் நன்றாக பழகி வந்துள்ளார். சிறு வயதில் இருந்தே பழக்கம் நட்பு இருந்ததாதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கருக்கலில் உள்ள காவல் நிலையத்தில் தனது தோழி மற்றும் தோழியின் நண்பன் மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த புகார் அளித்த இளம் பெண், தான் குளிப்பதை தனது சொல்போனில் புகைப்படம் எடுத்து தனது தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த பெண் தோழியோ, தனது தோழி அனுப்பிய அந்தரங்கப்புகைப் படத்தை மற்றொரு நெருக்கமான ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆண் நண்பர் அந்த புகைப்படத்தைக் காட்டி, அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண், அதன்பின்னர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்டபோலிஸார், அவரது தோழி மற்றும் ஆண் நண்பர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!