Tamilnadu
‘என்ன மன்னிச்சிடுங்க’.. கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை : போலிஸிடம் சிக்கிய கடிதம் - காரணம் என்ன?
வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து சில நாட்களாக முருகேசன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அதில், "மன அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுத்துவிட்டேன். இதற்கு வேறு காரணம் இல்லை. என் குடும்பத்தாரை அலைக்கழிக்க வேண்டாம். என்னை மன்னிச்சிடுங்க" என எழுதி வைத்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!