Tamilnadu
“தமிழ்நாடு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.. முதல்வரை பாராட்டி ஆளுநர் உரை” : சட்டப்பேரவை அப்டேட் !
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் புதிய ஆளுநராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி வணக்கம் தெரிவித்து தனது நன்றி உரையைத் தொடங்கினார்.
பின்னர் சட்டமன்றக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரை பின்வருமாறு : தமிழ்நாடு சட்டப்பேரவையில் எனது முதல் உரையை நிகழ்த்துவதை பெரும் மகிழ்ச்சி கருதுகிறேன்.
தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழ்நாடு அரசு, 8.55 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒமைக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில் தான் என்று ஆளுநர் கூறினார். தமிழ்நாட்டில் 86.95 சதவீதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்துள்ளது. வருமுன் காப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காக்க நம்மை காப்போம் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!