Tamilnadu
சிறுமி வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிய இளைஞர்.. தானும் குடித்து தற்கொலை முயற்சி : நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்று வேல்முருகன் பெண் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் டிசம்பர் 28ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்து சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியுள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்துள்ளார்.
இதையடுத்து இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிரமாக சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலிஸார் இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!