Tamilnadu
”கருப்பு, சிவப்பு, நீலம் இணைந்து புது சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும்” - ஆ.ராசா எம்.பி. பேச்சு!
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பெரியாரியல் பேரறிஞர் வே.ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, திமுகவின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நினைவு மலரை வெளியிட்ட பின் மேடையில் பேசிய ஆ.ராசா, 96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தந்தை மகனுக்கு ஆற்றக்கூடிய உணர்வோடு இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட தொடர்பு, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார்.
ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார். அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகிய மூவரையும் இணைத்து சித்தாந்தம் உருவாக வேண்டும். கருப்பு, சிவப்பு, நிலம் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!