Tamilnadu

“100 திருக்குறள் எழுத வேண்டும்” : இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலிஸ் : காரணம் என்ன?

கோவை மாவட்டம், மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது மேளம் வாசிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிறகு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பிலிருந்த போலிஸார் அவர்களைப் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இளைஞர்களிடம் உதவி காவல் ஆய்வாளர் கவியரசன் விசாரணை நடத்தினார். பின்னர் இளைஞர்களிடம் மனப்பாடமாக 100 திருக்குறள் எழுத வேண்டும் என நூதன தண்டனை வழங்கினார்.

இதையடுத்து இளைஞர்கள் காவல்நிலையத்திலேயே பல மணிநேரம் திருக்குறளைப் படித்து எழுதி காட்டினர். பிறகு அவர்களுக்கு உதவி காவல் ஆய்வாளர் கவியரசன் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

Also Read: ’சேர்ந்து வாழ வராததால் ஆத்திரம்’ : மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவன் - சென்னையில் பகீர் சம்பவம்!