Tamilnadu
’சேர்ந்து வாழ வராததால் ஆத்திரம்’ : மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவன் - சென்னையில் பகீர் சம்பவம்!
கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பான செய்திகள் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. அதில் சில சம்பவங்கள் அதிர்ச்சியாகவும் விநோதமாகவும் இருக்கிறது.
அந்த வகையில் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சத்தியசீலன் (29) என்பவருக்கும், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா (25) என்பவருக்கும் கல்யாணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன.
ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் பெரும்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சங்கீதா சென்றுவிடுவாராம். சண்டை முடிந்து சமாதானம் ஆனதும் இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் சத்தியசீலன் மீது சந்தேகப்பட்டு மனைவி சங்கீதா மீண்டும் பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
ஒரு மாதமாகியும் சங்கீதா திரும்ப வராததால் நேற்று இரவு அவரை அழைத்து வர சத்தியசீலன் சென்றிருக்கிறார். அப்போது விடாப்பிடியாக வர முடியாது என சங்கீதா மறுத்ததால் ஆத்திரம் தாளாமல் வீட்டு வாயிலில் இருந்த சங்கீதாவின் ஸ்கூட்டரை எரித்திருக்கிறார்.
இதனையடுத்து கணவர் சத்தியசீலன் மீது பெரும்பாக்கம் போலிஸிடம் சங்கீதா புகாரளித்திருக்கிறார். புகாரின் பேரில் சத்திய சீலனை அழைத்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!