Tamilnadu
விபத்தில் உயிரிழந்த காவலர்.. உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த போலிஸ் உயரதிகாரிகள்: நெகிழ்ச்சி சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், மாவூத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கொடைக்கானலில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாலசுப்பிமணி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் போலிஸார் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் சொந்த ஊரான மாவூத்தன்பட்டியில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாலசுப்பிரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா, ஆய்வாளர் சண்முகலட்சுமி உள்ளிட்ட போலிஸார் உயிரிழந்த பாலசுப்பிரமணியின் உடலைச் சுமந்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
பிறகு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாலசுப்பிரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த போக்குவரத்து போலிஸாருக்கு உயரதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!