Tamilnadu
பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தைக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுயைச் சேர்ந்த சிறுமியைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.
அந்தச் சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறியுள்ளார். பிறகு இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று வழக்கின் மீதான இறுதி விசாரணை நடந்த நிலையில், நீதிபதி சுகந்தி, குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!