Tamilnadu
கோவில்களில் தங்கி கஞ்சா விற்ற போலி சாமியார்.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
சென்னை ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர் சேகர். இவர் பொதுமக்களிடம் குறி சொல்லிவந்துள்ளார். மேலும் சாமியார் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு கஞ்சா வியாபாரமும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலிஸார் மாற்று வேடத்தில் கஞ்சா வாங்குவதுபோல் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேகர் சாமியார் வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோவில்களில் தங்கி கஞ்சாக விற்றது தெரியவந்தது.
மேலும், இவர் சாமியார் தோற்றத்தில் இருந்ததால் யாருக்கும் சேகர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேரும் கஞ்சாவை எடுத்து வந்து போலி சாமியார் சேகரிடம் கொடுத்து விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலி சாமியார் சேகர், ராஜா மற்றும் ஆசைதம்பியை ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஏழு கிலோ கஞ்சாவை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!