Tamilnadu
“பில்லி சூனியத்தை எடுக்குறேன்” : புகை போட்டு நகை திருடிய மந்திரவாதி - CCTV காட்சிகளை கொண்டு விசாரணை!
சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, வீட்டிற்குள் அதிகளவில் புகை போட்டு, நூதன முறையில் நகையை கொள்ளையடித்துச் சென்ற மந்திரவாதியை, போலிஸார் தேடி வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண், தனது மகளுடன் வசித்து வருகிறார். இருவரும் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட திருடன் ஒருவன் மந்திரவாதி வேடத்தில் ஆயிஷாவை அணுகியுள்ளான்.
மந்திரவாதி வேடத்தில் வந்த திருடன், ஆயிஷாவிடம் உங்கள் வீட்டில் பிரச்சினை பில்லி சூனியம் உள்ளது என்றும் அதை கழித்துவிட சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளான்.
இதனை நம்பி அந்த மந்திரவாதியை பூஜை செய்ய வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர். பூஜையின்போது மகள் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கழற்றி, சொம்பில் போடும்படி திருடன் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து அந்தப் பெண்ணும் தான் அணிந்திருந்த நகையை கழற்றி சொம்பினுள் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் மந்திரவாதி புகை போட்டுள்ளான். புகைமூட்டம் அதிகமாக இருந்த நேரம் பார்த்து அங்கிருந்து நகையுடன் மந்திரவாதி தப்பி சென்றுள்ளான்.
புகை மூட்டம் கலைந்த பின்னர் மந்திரவாதி மாயமானதை அறிந்த தாய், மகள் இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!