Tamilnadu
“குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. 4 வயது மகன் பரிதாப பலி”: விசாரணையில் பகீர் தகவல்!
சிவகங்கை மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு லட்சுமணன் என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் லட்சுமி தனது சகோதரிக்கு மூன்று பவுன் நகை கொடுத்துள்ளார். இதை அவர் திருப்பி கொடுக்கவில்லை. பிறகு இதையறிந்த கணவர் நகையை வாங்கி வரும் படி மனைவி லட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லட்சுமி சகோதரியின் வீட்டிற்குச் சென்று நகையைத் திருப்பி கேட்டுள்ளார். இதற்கு அவர் நகையை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் லட்சுமி கணவனுக்கு எப்படி பதில் சொல்வது என தெரியாமல் விரக்தியுடன் இருந்துள்ளார்.
பின்னர் லட்சுமி தனது நான்கு வயது மகனை கூட்டிச் சென்று திருமங்கலம் அருகே உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, அவரும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் லட்சுமியை உயிருடன் மீட்டனர். பிறகு சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மகனைக் கிணற்றில் வீசி கொலை செய்த தாயைக் கைது செய்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!