Tamilnadu

“இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு தந்த மாநிலம் தமிழ்நாடு” : உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்!

விழுப்புரம் சட்டக் கல்லூரியும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் பல்கலைக்கழகமும் இணைந்து முதலாவது பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்ட கல்லூரியில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் M.M சுந்தரேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞர்களாக பட்டம் பெறும் பெறுவோர் தங்களுக்குள் தன்னம்பிக்கையை தெளிவான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மிகச் சிறப்பாக வழக்கறிஞர்கள் தொழில் புரிய கடினமான உழைப்பு வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

இந்தியாவிலேயே பெண்களுக்கு என அதிக இட ஒதுக்கீடு தந்த மாநிலம் தமிழ்நாடு. எனவே பெண் வழக்கறிஞர்கள் தங்களது திறமையை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் 14 சட்ட கல்லூரி முதல்வர்கள் 9 பேர் பெண்கள் எனவே தமிழகம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விழாவில் தமிழக அரசின் வேண்டுகோளின்படி நாட்டுப்புற கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கிராமிய நடனம் ஆடி சிறப்பித்தனர்.

Also Read: “பொங்கல் சமயம் ஆம்னி பஸ்ஸில் அதிகக் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு”: எச்சரிக்கும் போக்குவரத்துத்துறை!