Tamilnadu
நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்த பெண்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது கணவர் கோபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தெய்வானை திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, உடன் பணியாற்றிய ஒருவருடன் தெய்வானைக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரிடம் தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த தெய்வானை மகளிர் காவல்நிலையத்தில் அந்த நபர் மீது புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலிஸார் இருவரையும் காவல்நிலையம் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தெய்வானை நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் தீக்குளிக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். பெண் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!