Tamilnadu
விபத்தில் சிக்கிய மூதாட்டி.. விரைந்து செயல்பட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
சென்னை அடுத்த ஆலந்தூர் தொகுதியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனது தொகுதி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பிறகு ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு இரவு காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அமைச்சரின் வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் விபத்தில் சிக்கி காயத்துடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அமைச்சர் அன்பரசன் மூதாட்டியிடம் சென்று நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
பிறகு உடனே குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முதல்வரை தொடர்புகொண்டு பேசினார். பிறகு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் மூதாட்டியை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து மூதாட்டியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் மருத்துவர்களிடம் மூதாட்டிக்கு உரிய முறையில் நல்ல சிகிச்சை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மூதாட்டிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தும் படி போலிஸாருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதவி செய்த தகவல் அறிந்து பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!