Tamilnadu
'ஆன்லைன் விளையாட்டு ஆசை காட்டி மளிகைக்கடைக்காரர் மகன்களிடம் ரூ.8 லட்சம் அபேஸ்'- பெண் உட்பட மூவர் தலைறைவு
சென்னை தேனாம்பேட்டை பாபு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் கடந்த 20 வருடங்களாக அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நிலம் வாங்குவதற்காக வங்கியில் இருந்து எட்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து தன்னுடைய கடையில் பத்திரமாக வைத்திருக்கிறார்.
இவருக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்க கூடிய இரண்டு மகன்கள் உள்ளனர். நடராஜனின் குடும்ப நண்பர் ராஜசேகர். இவரது மனைவி மெரிட்டா புஷ்பராணி. ராஜசேகர் வணிக வரித்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பத்தாம் வகுப்பு படித்துவரும் மகன் ஒருவர் இருக்கிறார். இவர் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உடையவர்.
ராஜசேகர்- மெரிட்டா புஷ்பராணியின் மகன் ஆன்லைனில் விளையாடுவதை பார்த்ததால் நடராஜன் மகன்கள் இருவருக்கும் ஆன்லைன் விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது
ஆன்லைன் விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்ட நடராஜனின் மகன்கள் இருவரும் எப்போதும் மெரிட்டா புஷ்பராணி வீட்டில் அவருடைய மகனுன் பழகி வந்துள்ளனர்.
மளிகைக்கடையில் தந்தை சேமித்து வைத்திருந்த சேமிப்பு பணத்தில் இருந்து சிறிய தொகையை எடுத்து வந்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி உள்ளனர்.
இதனை அறிந்த ராஜசேகரின் மனைவி மெரிட்டா மேலும் அதிகமான பணத்தை எடுத்து வருமாறு சிறுவர்களிடம் கூறியிருக்கிறார். அவ்வாறு பணம் எடுத்து வந்தால் ஐஸ்கிரீம் சாக்லெட் உள்ளிட்ட அனைத்து வகையான சாப்பாட்டையும் வழங்கியதால் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி மொத்தமாக பெரிய தொகையை எடுத்து வருமாறு கூறியதன் அடிப்படையில் மளிகை கடைக்காரரின் மகனும் தந்தை கடையினுள் இருந்த எட்டு லட்சம் ரூபாயை நடராஜனுக்கு தெரியாமல் புஷ்பராணியிடம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே நடராஜனின் மகன்கள் இருவரும் மடிக்கணினி வேண்டுமாறு தந்தையிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைத்த பணத்தின் மூலமாக 65 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலம் வாங்குவதற்காக கடையில் வைத்திருந்த பணத்தை தேடியபோது காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து இரண்டு மகன்களிடமும் நடத்திய விசாரணையில் பணத்தை மெரிட்டா புஷ்பராணியிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் மெரிட்டா புஷ்பராணி அவருடைய கணவர் ராஜசேகர் மற்றும் அவருடைய உறவினர் என மூன்று பேர் மீது ஏமாற்றுதல் மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மூவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!