Tamilnadu
சண்டைய தடுத்தது குத்தமா? போதையில் அப்பாவியை அடித்துக் கொன்ற மூவர் கும்பல்; திருப்பெரும்புதூரில் பயங்கரம்!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே சலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (33). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (27) ஆகிய இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு வீட்டிற்கு சென்ற நிலையில் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது உறவினரான பிரபாகரன் அவரது தம்பி சிவக்குமார் ஆகிய மூவரும் சந்திரசேகரன் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.
இதனை கண்ட சந்திரசேகரின் அண்டை வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுரேஷ் (38). கைகலப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து கலைந்து செல்ல அறிவுறுத்தி உள்ளார்.
இதனால் மது போதையில் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளான சிவகுமார்,பிரபாகரன் ஆகிய மூவரும் சேர்ந்து சுரேஷை பலமாக தாக்கி உள்ளனர்.
இதில் தலை மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயமுற்று ரத்த வெள்ளத்தில் சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை அழைத்து சென்று திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சியுற்றனர்.
இதனால் அச்சமடைந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மூவரும் பயந்து தலைமறைவாகினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருப்பெரும்புதூருக்கு அருகாமையில் தலைமறைவாக இருந்த மூவரையும் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் மூவரையும் திருப்பெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!