Tamilnadu

திராவிட இயக்கக் கொள்கைகளை அறிந்து கொள்ளும் வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு!

விழுப்புரத்தில் இன்று சமூகநலத் துறை சார்பாக கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான பொன்முடி கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்து பேசி அவர்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், அளவோடு குழந்தைகளைப் பெற்று, தாங்கள் பெரும் குழந்தைகள் திராவிட இயக்கக் கொள்கைகளை அறிந்து கொள்ளும் வகையில் வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னதாக சாலாமேடு E.B பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என பகுதி நேர ரேஷன் கடையின் புதிய கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து விழுப்புரம் திருநகர் பகுதியிலும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

Also Read: “கணவரை கொலை செய்ய முயற்சி.. புதுப்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்” : 5 பேர் கைது - அதிர்ச்சி சம்பவம்!