Tamilnadu
“சண்டையால் பேசாமல் இருந்த காதலி.. விபரீத முடிவெடுத்த காதலன்” : நடந்தது என்ன?
சென்னை அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமாரிடம் அந்தப் பெண் பேசாமல் இருந்துள்ளார். இதனால் செந்தில் குமார் மன வருத்தத்திலிருந்துள்ளார்.
இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!