Tamilnadu
சாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரம்... போலிஸில் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்: குவியும் பாராட்டு!
சென்னை பெரம்பூர் வினஸ் மார்கெட் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 12ம் வகுப்பு படிக்கும் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகிய மூன்று மாணவிகள் பள்ளி முடிந்ததும் மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, சாலையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்துள்ளது. இதை மாணவிகள் எடுத்துப் பார்த்தபோது அதில் பணம் இருந்திருக்கிறது. பிறகு மாணவிகள் இந்த கவரை பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தியிடம் வழங்கினர்.
அந்த கவரில் இருந்து பணத்தை எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எண்ணிப் பார்த்தபோது ரூ. 10 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் பணத்தைச் செம்பியம் குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தார். அப்போது காவல் ஆய்வாளர் கோமதி காவல்நிலையத்தில் இல்லை.
இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கோமதி அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தி, மாணவிகள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆயோரை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
மேலும், மாணவிகளுக்கு ரூ.500 கொடுத்து கவுரவித்தார். இதையடுத்து பணம் தவறவிட்டவர்கள் உரிய ஆதாரங்களைக் கூறி பணத்தை வாங்கிச் செல்லலாம் என அறிவித்துள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!