Tamilnadu
”அயராது பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - மழை பாதிப்புகள் குறித்து கொளத்தூரில் நேரில் ஆய்வு!
தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் போர்க்கால அடிப்படையில் வெள்ளப் பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நடைபெற்று வரும் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (10.12.2021) கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!