Tamilnadu
“குறைந்த உயரத்தில் திரும்பியதே ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம்?” : குன்னூர் போலிஸ் சொல்வது என்ன?
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் நேற்றைய தினம் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகளும், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப் படையின் எம்ஐ - 17 வி5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் திரும்பியதே விபத்திற்கு காரணம் என தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரியிடம் பேட்டி எடுத்து தி இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர் கல்லூரிக்கு வருகை தரும் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு தமிழக காவல்துறை ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
Mi-17V5 ஹெலிகாப்டர் தரையிறங்கவிருந்த வெலிங்டனில் உள்ள ஹெலிபேடிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் விபத்து நடந்த இடத்திற்கு முதலில் சென்றவர்களில் குன்னூர் காவல் ஆய்வாளர் ஒருவர். ஹெலிகாப்டர் கீழே விழுந்ததை நேரில் பார்த்த ஒருவரை மேற்கோள் காட்டி, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மற்றொரு போலிஸ் அதிகாரி வானிலை மேகமூட்டமாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர், ஹெலிகாப்டர் மிகக் குறைந்த உயரத்தில் பறப்பதைக் கண்டதாகக் கூறியுள்ளார். பலத்த வெடி சத்தத்துடன் பலா மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளதானதாகவும், சம்பவம் நடந்தபோது மேகமூட்டமாக இல்லை என்றும் பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரி கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணையில் மேகமூட்டமே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படும் வேளையில், போலிஸாரின் இத்தகைய பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!