Tamilnadu
மணிக்கு 225கி.மீ வேகம்.. விபத்துக்குள்ளான Mi-17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் குறித்த முக்கிய தகவல்! #EXCLUSIVE
குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது.
இதற்காக கோவை ராணுவ மையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு பிபின் ராவத்தும், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் L.S.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திரகுமார், விவேக்குமார், சாய் தேஜா சத்பா என 14 பேர் பயணித்திருக்கின்றனர்.
இந்நிலையில், நண்பகல் 12.30 மணியளவில் காட்டேரி நஞ்சப்பா சத்திரம் மலைப்பகுதியில் பிபின் ராவத் உள்ளிட்டோர் என்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. சுமார் ஒன்றரை மணிநேரமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 இராணுவத்தினர் பயணம் செய்த பட்டியலில் இராணுவத் தளபதி பிபின் ராவத் பெயர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் பயணித்தாகக் கூறப்படுகிறது. மேலும் விபத்துக் குறித்து விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது.
Mi-17 V5 விமானம் :
Mi-17 V5 விமானம் பல்நோக்கு ஹெலிகாப்டர் ஆகும். நடுத்தர அளவிலான தளவாடங்களை கொண்டு செல்லும் ஹெலிகாப்டர் ஆகும். இதில் அதிநவீன ஊடுருவல் உபகரணங்கள் மற்றும் நவீன ஏவியோனிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது துருப்புக்கள் மற்றும் ஆயுதப் போக்குவரத்து, தீயணைப்பு பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் எடை சுமார் 7,489 கிலோ ஆகும் மற்றும் அதன் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 13,000 கிலோ ஆகும். Mi-17 8 மீ/வி வேகத்தில் ஏற முடியும். ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் பயண வேகம் முறையே 250km/h மற்றும் 225km/h ஆகும். இது குறிப்பாக அதிக உயரத்திலும் வெப்பமான காலநிலையிலும் பயணம் செல்வதற்கான மேம்படுத்தப்பட்ட திறன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!