Tamilnadu
“2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய ஊர்மக்கள் - நடந்தது என்ன?
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் செம்பியநத்தம் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 30). மகள் கனிஷ்கா (வயது 6). மற்றொரு மகள் புவிஷா (வயது 3). சரண்யா நர்சிங் படிப்பு படித்துள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் சரண்யா தனது 2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்துள்ளார். மூவரும் கிணற்றினுள் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சரண்யா மற்றும் புவிஷா ஆகிய இருவரின் ஊடலையும் மீட்டுள்ளனர். கனிஷ்காவின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் பாலவிடுதி போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சரண்யா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? தனது 2 குழந்தைகளையும் ஏன் கிணற்றில் தள்ளினார்? குடும்பத்தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!