Tamilnadu
காவல் உதவி ஆய்வாளரைக் கத்தியால் தாக்க முயன்ற இளைஞர்கள்.. 2 பேர் கைது: நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த கல்லணைப் பகுதியில் தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யா பிள்ளை மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தின் வந்த நான்கு இளைஞர்களைப் பிடித்து போலிஸார் விசாரணை செய்தனர். இவர்கள் முன்னுக்குப்பின் பேசியதால் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பெல்டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த நரேஷ்ராஜ், அண்ணாவளைவு பகுதியைச் சேர்ந்த ரூபன், சாந்தகுமார், வினீத் என்பது தெரிந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென அந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து உதவி ஆய்வாளர் அய்யா பிள்ளையை தாக்க முயன்றனர்.
இதைப் பார்த்த சக போலிஸார் உடனே இளைஞர்களை தடுத்துநிறுத்தினர். இதைப் பயன்படுத்திக்கொண்ட இவர்கள் நான்கு பேரும் காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடினர். பிறகு போலிஸார் நரேஷ்ராஜ் மற்றும் வினீத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!