Tamilnadu
ஸ்கேன் எடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மருத்துவர் சஸ்பெண்ட்!
மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு இளம்பெண் ஒருவர் ஸ்கேன் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தி அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அடுத்த நாளும் அந்தப் பெண் பரிசோதனை மையத்திற்கு வந்தபோது மீண்டும் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணின் பெற்றோர்கள் இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் ரேடியாலஜி துறைத் தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இது குறித்தான அறிக்கை சென்னை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் சக்கரவர்த்தியை சஸ்பெண்ட் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!